ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்... நிலைமை இப்படியாகிவிட்டதே ?

jailer vs maaveeran

ரஜினியின் ‘ஜெயிலர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

jailer vs maaveeran

அதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில் பேட்ஜ் வெர்க் நடைபெற்று வருகிறது. 

jailer vs maaveeran

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி சுதந்திர தினத்தை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story