ரஜினிகாந்த் - நெல்சன் வெற்றி கூட்டணியில் ஜெயிலர் 2-விமர்சனம்

jailer 2

ஜெயிலர்  இரண்டாம் பாகத்தில் முதல் பாகம் போல் சுராஜ் வெஞ்சரமூடு, விநாயகனுக்கு பதிலாக அந்த இடத்துக்கு வருகிறார். அவருக்கும் மேல் இருக்கும் ‘பாஸ்’ தான் எஸ்.ஜே.சூர்யா. கோவாவில் அப்பா மிதுன் சக்ரவர்த்தி, சகோதரி வித்யா பாலன் மற்றும் 2 சகோதரர்களுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர்களின் சாம்ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட ரஜினிகாந்த் புறப்படுகிறார். அதன் பிறகு நடப்பதே அதிரி புதிரி விளையாட்டு.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் பார்த்த அதே வேகம், விவேகம், ஸ்டைல் என படம் முழுக்கவே தனது ஆர்ப்பரிக்கும் அவதாரத்தால் அப்ளாஸ் அள்ளுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகாலமாக சினிமாவில் கோலோச்சி இருப்பதற்கும் பல மூத்த நடிகர்கள் முயற்சித்தும் எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தும் நம்பர் 1 அரியாசனத்தில் ரஜினி இருப்பதற்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் இந்த படத்தைப் பார்த்தால் போதும். மனிதர் அதகளம் செய்திருக்கிறார்.

கோவையில் ஒரு டிபன் கடையில் கர்ப்பிணியை சித்ரவதை செய்யும்போது டைகர் முத்துவேல் பாண்டியனாக அவர் மாறும் இடம் மாஸ் என்றால், அவரை அவரது வீட்டிலேயே எஸ்.ஜே.சூர்யா தாக்கும்போது, அப்போது நடக்கும் சம்பவத்தால் மனதால் ரஜினி உடைந்துபோவது கிளாஸ். வீட்டு குழாயில் தண்ணீர் மண் கலந்து வருவதாக புகார் செய்ய மாநகராட்சி ஆபீசரிடம் செல்லும்போது அவர் காட்டும் பவ்யம், அங்கு ஆபீசரான பகவதி பெருமாள், உதாசினப்படுத்த முகம் தொங்கியபடி செல்லும் பாடிலாங்குவேஜ், பிறகு பகவதி பெருமாளை அக்கம் பக்கத்தினர் முன்பே லெஃப்ட் ரைட் எடுக்கும் ஆக்ரோஷம் என ஒருபுறம் பின்னியெடுக்கிறார் சூப்பர் ஸ்டார்.முதல் பாதி முழுக்க  திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் காமெடியால் ரசிகர்களை ஆக்கிரமிக்கிறார். இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மோடில் படத்துக்கு வேகம் கூட்டுகிறார். ஒட்டுமொத்தமாக ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி மீண்டும் ஜெயித்திருக்கிறது, 

Share this story