‘ஜெயிலர்’ வெற்றி ரகசியம் என்ன ?... நெல்சன் கூறிய சுவாரஸ்சிய தகவல் !

jailer

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கான ரகசியம் குறித்து சுவாரஸ்சிய தகவல்களை இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.  

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’.  கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 7 நாட்களில் இந்த படம் 375 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். 

இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன், நடிகர்கள் சுனில், வசந்த் ரவி, மிர்ணா மேனன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

jailer

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் நெல்சன், இந்த படம் பெரிய ஹிட்டாகும்னு பண்ணல. படத்தை நல்லா பண்ணனும்னு நெனச்சி பண்ணோம். இந்த படத்திற்காக அதிக நேரம் உழைத்தவர் எடிட்டர் நிர்மல்தான். இந்த படத்தில் சுனில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் நடித்தபோது சில ஐடியாக்களை அவர் கொடுத்தார். அதன்படியே காட்சிகளை படமாக்கினோம். எது நல்லா இருக்கோ அதை படத்தில் வைத்திருக்கிறோம். 

jailer

மேலும் படத்தின் பட்ஜெட் அதிகமானாலும் தயாரிப்பாளர் தரப்பு அதற்கு எதுவும் சொல்லாமல் உடனே பணம் கொடுத்தார்கள். தமிழகத்தை தாண்டி இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் தான். நினைத்ததைவிடா நல்ல வந்திருப்பதாக ரஜினி கூறினார்.. இந்த படம் சரியா வந்ததற்கு காரணம் அவர்தான். ரஜினிகாந்தின் பாடிலாக்வேஜ் அவரின் கண்களில்தான் இருக்கிறது. அதனால்தான் கண்களுக்கு அதிக ஷாட் வைத்திருப்போம். இந்த யோசன ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திதான் சொன்னார் என்று ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கான காரணங்களை நெல்சன் கூறினார். 

 

 

 

Share this story