ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது
1725795705795
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக வர்மா என்ற கதாப்பாத்திரத்தில் விநாயகன் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். விநாயகன் மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்களு ஒருவராவார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த விநாயகன், ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது போதையில் விநாயகன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விநாயகன் விமான பாதுக்காப்பு காவலர்கள் அவரை தனியாக ரூமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறுகிறார். நீங்கள் வேண்டும் என்றால் சிசிடிவி ஃபூட்டேஜை சரிப்பாருங்கள் நான் அப்படி என்ன தவறு செய்தேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.