1 மில்லியன் பார்வைகளை கடந்த ஜாலியோ ஜிம்கானாவின் பாடல்...!
1731575754000
நடிகர் பிரபுதேவா இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா கட்டிக்கிட்டா' பாடல் ஆண்டிரியாவின் குரலில் டபுள் மீனிங் வரிகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் அடுத்த பாடலான `ஊசி ரோசி' தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடலில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பிரபு தேவா இணைந்து நடனமாடியுள்ளனர். பாடல் மிகவும் ஜாலி வைபில் உள்ளது. வெளியான குறுகிய நேரத்திலே பாடல் யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.