“தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்” - நடிகர் கமலஹாசன் மகிழ்ச்சி !

jallikattu

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்தது தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டு தை பொங்கலன்று காளைகளை அடக்கி தமிழர்கள் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். காலங்காலமாய் நடைபெற்று வந்த இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு தற்காலிகமாக தடை விதித்த நிலையில் அதன்பிறகு தமிழக அரசு சட்டம் இயற்றி போட்டிகளை நடத்தி வந்ததது.

jallikattu

ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழ் பண்பாட்டின் அடையாளமான ஜல்லுக்கட்டு நடத்த தடையில்லை என்று தீர்ப்பு அளித்தது. இதை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் கமலஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.

jallikattu

இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். 


இதேபோன்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், 6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன் , போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன். அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன். தமிழர் ஒற்றுமை வென்றது என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story