`ஜமா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

Jama

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. ஜமா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். படம் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. ஜமா திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் இப்படத்தை காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

Share this story