ஜனவரியில் வரும் ஜனநாயகன் -விஜயின் கடைசி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் .

நடிகர் விஜய் தன் கடைசி படத்தின் கடைசி நாள் எமோஷனலாக இருந்தார் என்று கூறப்படுகிறது
நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் .இந்நிலையில் அவர் அரசியல்
கட்சி ஆரம்பித்துள்ளதால் ,அவர் திரையுலகில் கடைசியாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் .இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.இப்பாடத்தில் கடைசி நாள் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது .இப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது .
இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை படக்குழு கொண்டாட முடிவு செய்தனர் .
இதனை படக்குழு மிக பிரம்மாண்டமாக அவருக்கு ஃபேர்வெல் பார்ட்டி கொடுத்து அனுப்பி வைக்க படக்குழு திட்டமிட்டது. அந்த விழாவில் படத்தில் நடித்த அனைவரும், தீவிர ரசிகர்கள் வைத்து இந்த விழாவை நடத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது ஆனால் விஜய் அதனை தன்மையுடன் மறுத்துள்ளார்.விஜய் சில நாட்களாக படப்பிடிப்பில் எமோஷனலாக இருந்தார் என கூறப்படுகிறது. இதுவே அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.இப்படத்தில் விஜயுடன் ,பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்