‘பகவந்த் கேசரி’ பட உரிமையை வாங்கிய ‘ஜன நாயகன்’ படக்குழு... என்ன காரணம் தெரியுமா..?

jananayagan

‘ஜன நாயகன்’ படக்குழு ‘பகவந்த் கேசரி’ பட உரிமையை வாங்கியதற்கான காரணம் வெளியாகி உள்ளது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘ஜன நாயகன்’. விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு அண்மையில் கொடைக்கானலில் நடைபெற்று முடிந்தது. அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. 

vijay
அரசியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் உரிமையை படக்குழு வாங்கியிருப்பதாக கூறப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ‘பகவந்த் கேசரி’ படத்தில் பள்ளி மாணவர்களிடையே பேசும் பாலகிருஷ்ணா அவர்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து வகுப்பெடுப்பார். இந்த ஒரு காட்சி ‘ஜன நாயகன்’ படத்தில் இடம்பெற உள்ளதாம்.  இதற்காக வேண்டி படத்தின் உரிமையை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே படம் முழுமையான ரீமேக் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this story