ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் 'பரம் சுந்தரி'

param sundari
மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்குகிறார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடிக்க உள்ளனர். இந்த படம் அடுத்த வரும் ஜூலை 25-வது ரிலீஸ் ஆகும். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் இடம் பெற்றுள்ளார். இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜான்வி கபூர் சமீபத்தில் ஜூனியர் என்.டி ஆர் நடித்த தேவரா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்பொழுது இப்படத்திலும் தென்னிந்திய பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Share this story