அழகிய தமிழில் பேசி அசத்திய ஜான்வி கபூர்...!

Jhanvi kapoor

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’. சுதாகர் மிக்கிலினேனி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் கதாநாயாகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அவர் அறிமுகமாகிறார். இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

null


இந்த நிலையில் இப்படத்தின் புரொமோஷன் பணிகல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய படக்குழு படம் குறித்து நிறைய விஷயங்கலை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஜான்வி கபூர் கலந்து கொண்டு பேசுகையில், “எனக்கு சென்னை ரொம்ப ஸ்பெஷல். அம்மாவுடன் நான் இருந்த சிறந்த நினைவுகள் சென்னையில் தான் அமைந்தது. நீங்க கொடுத்த அன்பு தான் நானும் என் குடும்பமும் இப்போது நல்ல நிலைமையில் இருப்பதற்கு காரணம். அதற்காக எப்போதும் நான் உங்களுக்கு கடமை பட்டுள்ளேன். அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக கடின உழைப்பை கொடுப்பேன்” என்றார். மேலும் நேரடி தமிழ் படத்தில் விரைவில் நடிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டு தொடக்கத்தில் 'பையா 2' படம் மூலம் ஜான்வி கபூர் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அத்தகவல் பொய்யான தகவல் என்றும் ஜான்வி கபூர் எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என்றும் அவரது தந்தை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story