தமிழில் அறிமுகமாகும் நடிகை ஜான்வி கபூர்...?
1745501785074
நடிகை ஜான்வி கபூர் விரைவில் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த ‛தேவரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தற்போது ராம் சரண் நடிக்கும் ‛பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவர் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்டகத்தி தினேஷை நாயகனாக வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் படத்தில் நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் ஜான்வி கபூர் அறிமுகமாகப் போகிறார்.

