வந்தியதேவனை சந்திக்க வந்த ஜப்பான் ரசிகை...வியப்பில் ஆழ்ந்த நடிகர் கார்த்தி !

PonniyinSelvan

பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக நடித்த கார்த்தியை பார்க்க சென்னைக்கு ஜப்பான் ரசிகர்கள் வந்துள்ளனர்.  

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இருபாகங்களாக உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

PonniyinSelvan

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான 3 நாட்களில் 100 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த சில ரசிகர்கள் நேரடியாக கார்த்தியின் வீட்டிற்கே சென்று அவரை பார்த்து பாராட்டினர். அப்போது ஜப்பான் ரசிகை கட்டிப்பிடித்து கார்த்தி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது 4 முறை பொன்னியின் செல்வனை பார்த்ததாக அந்த ரசிகை கார்த்தியிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே இதுபோன்று ஜப்பான் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story