“ஜப்பான்” யாரு ?.. கார்த்தி பிறந்தநாளில் வெளியான செம்ம அறிவிப்பு !

japan

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பை ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. அவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடிக்கும் திரைப்படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’

japan

இந்த படத்தை ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த ராஜூ முருகன் இயக்கி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

japan

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. இதற்காக 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி பிறந்தநாளையொட்டி இப்படத்தின் இன்ரோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளது. 

Share this story