ஜப்பான் திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி ஓடிடி தளத்தில் வௌியீடு

ஜப்பான் திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி ஓடிடி தளத்தில் வௌியீடு

நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில்  'ஜப்பான்' திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'ஜப்பான்' திரைப்படம்  நடிகர் கார்த்தியின்  25வது படம் என்பதால் மிக அதிக பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.  இத்திரைப்படம் தீபாவளிய பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. 

ஜப்பான் திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி ஓடிடி தளத்தில் வௌியீடு

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 11-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

Share this story