‘ஜப்பான்’: கார்த்தி பாடிய டச்சிங் டச்சிங் வீடியோ பாடல் வெளியீடு.

photo

கார்த்தியின் சூப்பர் ஹிட் நடிப்பில், வரும் தீபாவளி ரிலீஸ்ஸாக வெளியாகவுள்ள ‘ஜப்பான்’ படத்திலிருந்து ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

photo

குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜப்பான்’ இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமாக தயாராகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை கூட்டிய நிலையில் தற்போது கார்த்தி பாடிய ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கார்த்தியுடன் இணைந்து பாடகி இந்திரவதி சௌகான் பாடியுள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story