கார்த்தியின் ‘ஜப்பான்’ படம் இரண்டு நாட்களில் நிகழ்த்திய வசூல் விவரம்.

photo

தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘ஜப்பான்’ படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

photo

கார்த்தி, அனு இமானுவேலின் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருந்தனர். ரசிகர்களின் உற்சாக வரவேற்பிற்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முதல் நாளில் படம் 4.15கோடியை வசூலித்திருந்தாலும் அடுத்த நாளில் வசூல் 3கோடியாக குறைந்தது. அதற்கு காரணம் படத்தில் கார்த்தி மட்டும் ஒன்மேன் ஆர்மியாக படத்தை சுமந்துள்ளதுதான். கதை, திரைக்கதையில்  நிறைய இடத்தில் மெதுவாக செல்வதுதான் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Share this story