கார்த்தி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் காத்திருக்கு.‌‌.. வெளியாகிறது 'ஜப்பான்' அப்டேட்

japan

 கார்த்தியின் பிறந்தநாளையொட்டி 'ஜப்பான்' படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். 

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் கார்த்தி அடுத்து நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறார்.‌

japan

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இறுதியில் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. இதற்காக 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது 46வது பிறந்தநாளை வரும் மே 25-ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதையொட்டி 'ஜப்பான்' படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ‌

Share this story