இன்று முதல் ‘ஜப்பான்’- ரசிகர்கள் வெள்ளத்தில் மிதக்கும் ‘கார்த்தி’.
நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் ஜப்பான். படத்தை பார்க்க காசி தியேட்டருக்கு வந்த கார்த்தியை காண ரசிகர்கள் கடல் அலைபோல திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜப்பான்’ இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமாக தயாராகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் தாறுமாறாக தயாராகியுள்ள நிலையில் இன்று படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
The 'hero' of the show @Karthi_Offl is here to catch #JapanFDFS
— DT Next (@dt_next) November 10, 2023
📸 @_Hemanathan_
📍 @kasi_theatre@ItsAnuEmmanuel @DreamWarriorpic @Dir_Rajumurugan @prabhu_sr @saregamasouth @gvprakash #Karthi #Karthi25 #Japan #JapanMovie #GVPrakash #Rajumurugan #Japanreview #Kollywood pic.twitter.com/batuRnhDyz
இந்த நிலையில் தீபாவளி விருந்தாக வந்துள்ள ஜப்பான் படத்தை காண கார்த்தி சென்னை காசி தியேட்டருக்கு வந்துள்ளார். அப்போது அவரை காண ரசிகர்கள் திரண்டு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காரின் கதவை திறக்ககூட முடியாத வகையில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து தீபாவளி ரேஸில் உள்ள ஜப்பான் படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.