காஷ்மீரில் ‘ஜப்பான்’ ஷூட்டிங்... ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி !

japan

‘ஜப்பான்’ படப்பிடிப்பிற்காக நடிகர் கார்த்தி காஷ்மீர் சென்றுள்ள நிலையில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்‘.  வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் இப்படத்தை ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கி வருகிறார்.

japan

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‌ இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இவர்களுடன் இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் இப்படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்காமல் இருந்தது. அதற்காக கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று முன்தினம் காஷ்மீர் சென்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அங்கு ரசிகர்களுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

Share this story