புரமோஷன் பணியை தொடங்கியது ஜப்பான் படக்குழு
நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் 'ஜப்பான்' திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'ஜப்பான்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிக அதிக பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியது. முதல் கட்டமாக சென்னை, ஆந்திராவில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.