அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில்  'ஜப்பான்' திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'ஜப்பான்' திரைப்படம்  நடிகர் கார்த்தியின்  25வது படம் என்பதால் மிக அதிக பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வௌியீட்டு விழா வரும் 28-ம் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Share this story