விஜய்யின் மகன் பட ஹீரோ யார் தெரியுமா?- வெளியான லேட்டஸ்ட் தகவல்.

photo

நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநர் எஸ்.ஏ.சியின் பேரனுமான ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவன தயாரிப்பில் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இந்த நிலையில் அவரது படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

குறும்படத்தை இயக்கிய ஜேசன் சஞ்சய், பிரபல நிறுவனமான லைக்கா தயாரிப்பில் முழு நீள படத்தை இயக்க உள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஜோசன் சஞ்சய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் புகைப்படத்தை லைக்கா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு இதனை அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அவரது படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி நடிகர் கவினிடன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது.  இதற்கு முன்னர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

photo

ஜேசன் சஞ்சயின் முதம் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளாராம். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

Share this story