விஜய் மகன் இயக்கத்தில் சந்தீப் கிஷன்!

Jasom sanjay

ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார்.விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவருடைய படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிறது. ஜேசன் சஞ்சய் படத்துக்கான கதையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.இதனிடையே, பல்வேறு முன்னணி இயக்குநர்கள் நடிகராக நடிக்க வைக்க அணுகிய போதிலும் ஜேசன் சஞ்சய் மறுத்துவிட்டார். இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார். தற்போது அவருடைய கதையின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகிறது. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.முதலில் பெரிய நாயகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தான் விரும்பினார் ஜேசன் சஞ்சய். ஆனால், யாரிடமும் தேதிகள் இல்லாத காரணத்தினால் இப்போது சந்தீப் கிஷனை வைத்து படத்தினைத் தொடங்கவுள்ளார். தற்போது சந்தீப் கிஷன் உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Share this story