ஜவான் திரைப்படம் முதல் நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல்

ஜவான் திரைப்படம் முதல் நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Share this story