ஐநூறு கோடி ரூபாய் வசூலை கடந்தது ஜவான்
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம், 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்து வருகிறது.
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய சாதனையைப் படைத்து வருகிறது. தென்னிந்திய சினிமாவில் ப்ளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் அட்லீ இத்திரைப்படத்தில் கிங்கான் ஷாருக்கானை இதுவரை ரசிகர்கள் கண்டிராத தோற்றத்தில் மாஸாக காட்சிப்படுத்தியுள்ளார். ஆக்சன், ரொமான்ஸ், காமெடி, இரண்டு விதமான கதாப்பாத்திரம், பலவிதமான லுக் என ஷாருக்கான் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
Your love for Jawan has clearly made history in Indian Cinema! 🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 11, 2023
Have you watched it yet? Go book your tickets now!https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/bhPcRF3AxF
உலகம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஜவான் திரைப்படம் வசூலில் இன்னும் மிகப்பெரிய சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.