மிகப்பெரிய தொகைக்கு ‘ஜவான்’ உரிமை... கெத்துக்காட்டும் பிரபல நிறுவனம் !

jawan

‘ஜவான்’ படத்தின் தமிழகம் மற்றும் கேரள உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிறப்புத்தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ளனர். 

jawan

இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

jawan

சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் தமிழகம் மற்றும் கேரள உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story