சென்னையில் நடக்கும் ‘ஜவான்’ ப்ரோமோஷன் நிகழ்ச்சி... சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் ?

jawan

சென்னையில் நடைபெறும் ‘ஜவான்’ ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

sharukh khan with vijay

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிறப்புத்தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

sharukh khan with vijay

 அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றியுள்ளார். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் கலந்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Share this story