ஜவான் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியீடு
1698825118446
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும், ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், ஜவான் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் முழுநீள ஜவான் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

