ஜப்பானில் ரிலீசாகும் ஜவான்.. அடுத்த வசூல் வேட்டை விரைவில்

jawan

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் செய்தது. இதுவரை திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஊழல் மிக்க இந்த சமூதாயத்தை தட்டிக் கேட்கும் தந்தை மற்றும் மகனின் கதையாகும். திரைப்படம் வெளியாகி 1 வருடம் ஆன நிலையில். அதை நினைவூட்டும் வகையில் ஷாருக்கான் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் ஜவான் திரைப்படம் ஜப்பானில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளனர். ஜப்பானில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


 

Share this story