விறுவிறுப்பாக நடைபெறும் ‘சைரன்’ படப்பிடிப்பு.. ஜெயம் ரவி படத்தின் முக்கிய அப்டேட்

siren

 ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் சைரன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’ ஆகிய படங்களுக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சைரன்’. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். Home Movie Makers சார்பில்  சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

siren

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை அனுபமா பரமேஷ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கணி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

ஆக்ஷன் த்ரில்லரில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜெயம் ரவி மற்றும் அனுபமா இணைந்து நடிக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. 


 

Share this story