ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனம்.. விரைவில் ஓடிடியில் வெளியாகிறது ‘அகிலன்’ !

agilan

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகதாக தகவல் கசிந்துள்ளது. 

இயக்குனர் கல்யாண் - நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. ஹார்பர் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்காக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். 

agilan

இந்த படத்தில் ஜெயம் ரவி ஹார்பரில் கிரேன் ஆப்ரேட்டராகவும், கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சாம் சிஎஸ் இசை படத்திற்கு  கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பெருங்கடலில் அரசுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியானது. 

agilan

இந்த படம் முதலில் வரவேற்பை பெற்ற நிலையில் அதன்பிறகு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதனால் வசூலிலும் பின்தங்கியுள்ளது. அதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் 10-ஆம் தேதி வெளியான இப்படம் வரும் 31-ஆம் தேதி ஜி5 ஓடிடித்தளத்தில் வெளியாகிறது. இது ஜெயரம் ரவிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story