மிரட்டலாக வருகிறான் ‘அகிலன்’.. ஜெயம் ரவி பட ரிலீஸ் அறிவிப்பு !

agilan

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி ஆன்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்துள்ளார். ஹார்பர் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 

agilan

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்காக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

தமிழகத்தில் இந்த படத்தை சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story