மிரட்டல் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘அகிலன்’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

agilan

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. 

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உணவு அரசியல் குறித்து பேசியுள்ள இந்த படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹார்பர் கேங்ஸ்டராக ஜெயம் ரவி அசத்தலாக நடித்துள்ளார். 

agilan

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க ஹார்பரில் நடக்கும் சம்பங்களை வைத்து மட்டுமே இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் ஜெயம் ரவி ஆன்ட்டி ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் போலீசாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஹார்பரில் நடக்கும் கடத்தல் சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Share this story