ஹார்பர் கேங்ஸ்டராக மிரட்டும் ஜெயம் ரவி... 'அகிலன்' டிரெய்லர் !

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'அகிலன்' படத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக மறைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஹார்பரில் இருக்கும் மிரட்டலான கேங்ஸ்டராக ஜெயம் ரவி நடித்துள்ளார். ஹார்பரில் நடக்கும் மாஃபியா பிரச்சினை குறித்து இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.