ஜெயம் ரவியை இயக்கும் உதயநிதியின் மனைவி.. புதிய படத்தின் அப்டேட்

jayam ravi

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சரும், நடிகருமான உதயநிதியின் மனைவியாவார். கடந்த 2013 ஆம் ஆண்டு ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து இரண்டாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தை இயக்கினார்.

jayam ravi

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு பிறகு காளிதாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்த ‘பேப்பர் ராக்கெட்’ படத்தை இயக்கினார். ஓடிடியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படி தொடர்ந்து மூன்று திரைப்படங்களை கிருத்திகா இயக்கியுள்ளார். 

இந்நிலையில் புதிய படம் ஒன்றை கிருத்திகா இயக்கவுள்ளார். நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. 

Share this story