​ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் ‘பசங்க’ இயக்குனர்... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

 pandiyaraj

விரைவில் நடிகர் ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பாண்டியராஜ். ‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அவருக்கு முதல் படமே நல்ல ஓபனிங் தர அடுத்து வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கோலிசோடா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

 pandiyaraj

இதில் கடைசியாக சூர்யாவை வைத்து இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. அதனால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதற்காக சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்ளிட்டோரிடம் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் மூவருமே படு பிசியாக இருப்பதால் அடுத்த படம் இயக்குவதில் சிக்கல் இருந்தது. 

 pandiyaraj

இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

Share this story