‘ஜெயம் ரவி’ காட்டுல மழைதான்! – மூன்று கதாநாயகிகளுடன் டூயெட் பாட தயார்.

photo

கோலிவுட்டின் பிசியான நடிகராக மாறியுள்ளார் ஜெயம்ரவி. இந்த நிலையில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் பட்ம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் அவருடன் மூன்று கதாநாயகிகள் ஜோடிபோட உள்ளனர்.

photo

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம்ரவியின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஜெயம் ரவியின் தோற்றம், நடிப்பு என அனைத்துமே கனகச்சிதமாக அந்த படத்தில் அவருக்கு பொருந்தியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது நயன்தாராவுடன் சைரன், என். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதனுடன் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மிஸ்கினின் உதவி இயக்குநரான புவனேஷ் இயக்க உள்ளார். படத்திற்கு ஜீனி என பெயரிட்டுள்ளார்களாம். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இந்த படம் சுமார் நூறு கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாவும் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

photo

இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் மொத்தமாக மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம், அதன்படி, க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்றாம் நாயகி தேடல் நடக்கிறதாம். அது முடிந்தவுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story