இறைவன் பட நிகழ்ச்சியில் நடனமாடிய ஜெயம்ரவி
இறைவன் பட நிகழ்ச்சியில் ஜெயம்ரவி மேடையில் நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறைவன் படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
Jayam Ravi Dance 💥pic.twitter.com/3tUMHDMQhL
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 24, 2023
இந்நிலையில், பட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜெயம்ரவி, மேடையில் எங்கேயும் காதல் பட பாடலுக்கு நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.