தீபாவளி ரேசில் இணைந்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’
‘சிவா மனசுல சக்தி’,‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் எம். ராஜேஷ். இவர் தற்போது ஜெயம் ரவியை வைத்து ‘பிரதர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ் சுப்ரமணியம், சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி...’ கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பாடலைப் பால் டப்பா என்பவர் எழுதி, பாடியிருந்தார். ‘மக்காமிஷி’ என்பதற்கு கெத்து, உடல்மொழி என்று அந்த பாடலின் தலைப்புக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. ஏற்கனவே தீபாவளி தினத்தன்று (அக்டோபர் 31) சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Let's Celebrate this Diwali 💥 with @actor_jayamravi 's #Brother movie.
— Screen Scene (@Screensceneoffl) August 3, 2024
💯 𝗙𝗮𝗺𝗶𝗹𝘆 𝗘𝗻𝘁𝗲𝗿𝘁𝗮𝗶𝗻𝗲𝗿 #BrotherFromDiwali 🧨@rajeshmdirector @Jharrisjayaraj @priyankaamohan pic.twitter.com/wvyVIAeUXq