ஜெயம் ரவியின் மிரட்டலான நடிப்பில் ‘அகிலன்’... மேக்கிங் வீடியோ வெளியீடு !

agilan

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்‘. துறைமுகம் பகுதியில் நடக்கம் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான கேங்ஸ்டராக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர்  போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

agilan

உணவு அரசியல் குறித்து பேசியுள்ள இந்த படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

agilan

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆங்கிலம் திரைப்படம் எப்படி படம் ஆக்கப்பட்டது என்பது காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்காகவும் படக்குழுவினர் சிரமப்பட்டு பணியாற்றி உள்ளது தெரிகிறது. 

Share this story