ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸ் எப்போது ?... வெளியானது புதிய தகவல் !

agilan

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

agilan

சென்னை துறைமுகத்தை சுற்றி நடக்கும் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். 

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

Share this story