ஜெயம் ரவி நடித்த பிரதர் படத்தின் டீசர் & இசை வெளியானது
1726916408969
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது. பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். படத்தின் டீசர் மற்றும் பாடலகள் இன்று வெளியானது. திரைப்படத்தின் ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன்,பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெயம் ரவி படத்தில் கார்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.