தள்ளிப்போகும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’... வெளியானது புதிய அப்டேட்

iraivan

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'ஜன கன மன' படத்தின் இயக்குனர் அகமது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

iraivan

ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஒரு கொலை சம்பவத்தை மையமாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளது  இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் நிறைவுபெறாததால் படத்தின் ரிலீசை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

Share this story