மித்ரனின் அடுத்த எதிரி யார் ?... ‘தனி ஒருவன் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ThaniOruvan2

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘தனி ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி இணைந்து நடித்திருந்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது. ஜெயம் ரவி மித்ரன் என்ற பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி வில்லனாக நடித்திருந்தார். 

ThaniOruvan2

இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்திலும் நடிகை நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்கிறார். 

ThaniOruvan2

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் முதல் பாகத்தை எதிரியை தேடியை மித்ரன் சென்றார். இரண்டாம் பாகத்தில் மித்ரனை தேடி எதிரி வருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story