விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் ஜெயம்ரவி
1695623794340
சென்னையில் நடைபெற்ற இறைவன் பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்கப் போகிறேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’ திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடந்தது. ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அகமது இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில், விஜய்சேதுபதி, இயக்குநர் வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில், பங்கேற்று பேசிய ஜெயம்ரவி, தான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான், விரைவில், தனக்கு, கால்ஷீட் கொடுங்கள் என கேட்டார்.