பள்ளி நிகழ்ச்சியில் பிரபல இயக்குனருடன் கலந்துக்கொண்ட ஜெயம் ரவி.. வைரலாகும் புகைப்படங்கள் !
1692382928090

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் ஜெயம் ரவி கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள PSBB பள்ளியில் நடந்த கல்ச்சுரல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
அப்போது மாணவர்களிடையே இருவரும், வருங்கால சமுதாயம் குறித்து சில நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு ஜெயம் ரவியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவர்கள், பின்னர் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.