ஜெயம் ரவியின் 'பிரதர்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்..!

brother

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் நடித்துள்ள ''பிரதர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படமானது தீபாவளியை முன்னிட்டு அக்.31ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். ரொமான்டிக் காமெடி படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற ராஜேஷ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘பிரதர்’.

இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் குமார், ராவ் ரமேஷ், எம் எஸ் பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால் மற்றும் மாஸ்டர் அஷ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'ஸ்கிரீன் சீன் மீடியா'(Screen Scene Media) என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியாகிறது.

 
முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிள் ‘மக்காமிஷி’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் அக்டோபர் 23 மணிக்கு வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. சைரன் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் பழைய ஜெயம் ரவி படங்கள் போல் இல்லை என அவர்களது ரசிகர்கள் புலம்பி வருகின்றன.

இதனால் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இந்தநிலையில் சீரியஸ் படங்களில் இருந்து சற்று விலகி காமெடி ரூட்டுக்கு மாறியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலகலப்பான ஜெயம் ரவியை இப்படத்தில் காண முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story