ரோம்காம் கதையாக உருவாகும் ஜெயம்ரவி திரைப்படம்
பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சைரன், ஜீனி, பிரதர், தனிஒருவன் 2 இப்படி பட படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியானது. சைக்கோ திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதற்கிடையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஜெயம் ரவியின் 33வது படமான இந்தப் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் JR33 படம் குறித்து நித்யா மேனன் அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசுகையில், JR33 படமானது ஒரு அழகான ரொமான்டிக் காமெடி படம் என்றும், தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.