‘விஜய் சேதுபதி’யை எதிர்க்க தயாரான ‘ஜெயராம்’- சூப்பர் அப்டேட்.

photo

இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் மிஸ்கின் அவரது வில்லத்தனமான நடிப்பில் பல படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. தற்போது லியோ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  இவரது இயக்கத்தில் கடைசியாக தயாரான படம் ‘பிசாசு 2’ இந்த படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர் படம் கடந்த வருடமே தயாரான நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

photo

இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி போட்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்க உள்ளாராம். இருவரும் ‘மார்கோனி மத்தாய்’ என்ற மலையாள படத்திற்கு பின்னர் மீண்டும் இந்த படத்தில் இணைய உள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயராம் நடிக்க உள்ள தமிழ் படம் இதுவாகும்.

Share this story